10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு


சதொச விற்பனை நிலையங்களில், இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 210 ரூபாவுக்கும்,


ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 298 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 270 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 119 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் டின் மீனின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 520 ரூபாவுக்கும்,


ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 555 ரூபாவுக்கும்,

ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 1,100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 450 ரூபாவுக்கும்,


ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ஆயிரத்து 380 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.