புதிய காழி நீதிபதியாக எஸ்.எம். இப்றாஹிம் நியமனம்
- ஏ.எம். றிகாஷ்
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாகப் பகுதிக்கு கடமை புரிவதர்க்காக 01.03.2023 ம் திகதி தொடக்கம் புதிய காழியாக பிரதம உள்ளக கணக்காய்வாளராக கடைமையாற்றி ஓய்வு பெற்ற *"சம்சுதீன் முஹம்மது இப்றாஹீம் "* நியமனம் பெற்றுள்ளார்கள் .
இவருடைய கடந்த 30ஆண்டு கால சேவைகளில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் , இறக்காமம், கல்முனை பிரதேச செயலகங்கள் மற்றும் கல்முனை RDHS அலுவலகம், அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் கணக்காய்வாளராக பணிபுரிந்ததோடு, கிழக்கு மாகாண சபையின் பிரதம உள்ளக கணக்காய்வாளராகவும், இறுதியாக மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்துபிரதம உள்ளக கணக்காய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக