எல்லாவலயில் நீராடிய நால்வரினதும் உடல்கள் மீட்பு !
எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் 04 இளைஞர்கள் உயிரழந்தனர்.
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்களில் ஒருவரின் உடல் நேற்று (சம்மாந்துறை) எடுக்கப்பட்டிருந்தது.
இன்று (22) ஏனைய மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உல்லாசமாக சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது,சம்மாந்துறை பிரதேசங்களில் வசிக்கும் இருபத்தி இரண்டு முதல் இருபத்தி மூன்று வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக