பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அனைத்து பிராந்திய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

அரச, அரை அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை (15) முன்னெடுக்கவுள்ள ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஈடுபடவுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.