அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியுள்ளது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சேதமடைந்துள்ளன . மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ் என்பவர் தெரிவிக்கையில்,
நேற்று மதியம் கடுமையாக தாக்கிய சூறாவளியால், அர்கான்சாஸ் மாகாணத்தின் நார்த் லிட்டில் ராக் பகுதியில் முதல் நபர் பலியானார்.
அந்த பகுதியில் 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் பாதிப்படைத்து இருக்கலாம் என கூறியுள்ளார்.
இதுதவிர, செயின்ட் பிரான்சிஸ் கவுன்டியில் வைன்னே நகரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி நகரில் வலிமையான சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்த ஒரு வாரத்தில் மற்றொரு சூறாவளி தாக்கியுள்ளது. இதன் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என கூறப்படுகின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக