சினிமா என்கிற சக்திவாய்ந்த ஊடகத்தில் முஸ்லிம்களும் கால்பதிக்க வேண்டும் என்பதை புனித ரமலானில் வெளியாகியுள்ள புர்கா என்கிற இஸ்லாமோஃபோகிக் திரைப்படம் மிக அழுத்தமாக கூறியுள்ளது.
வெகுஜன ஊடகம் என்ற வகையில் மக்களின் சிந்தனைகளை கட்டமைப்பதில்  சினிமாவின் வகிபாகம் மிகப் பெரியது. சினிமா, கருத்தியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இன்று இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளது. அத்தகைய ஓர் சக்திவாய்ந்த ஊடகத்தை பயன்படுத்தி இஸ்லாம் உலகிற்கு எதை கூற வருகின்றது என்பதை மிகவும் தாக்ககரமான வகையில் முன்வைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக அதிகமாகவே உள்ளன.
இச் சக்திவாய்ந்த வெகுஜன ஊடகத்தை
இஸ்லாமோபோஃபியா என்ற நிறுவனமய சக்திகளுக்கு கைப்பற்ற இடமளிக்கக் கூடாது.
இதன் பொருள் முஸ்லிம்களும் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பதல்ல. இன்று பாரிய வளர்ச்சி பெற்றுள்ள சினிமாத் துறையில் 
கருத்தியல் ரீதியாக முஸ்லிம்கள் எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என்ற ஆரோக்கியமான உரையாடல்களே இப்போதைய தேவை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.