வாழ்க்கைச் சூழல் மாற்றத்திற்கான நிறுவனத்தின் தேவை

ஒரு மனிதன் வாழுகின்ற சூழல் அவனில் பாரியளவில் தாக்கம் செலுத்துகிறது.வாழ்க்கைச்சூழல் மாற்றம் நடத்தை மாற்றத்திற்கான அடிப்படையான விடயமாகும்.தொடர்ச்சியாக 21 நாட்கள் ஒரு பழக்கத்திற்கு ஒரு மனிதன் இசைவாக்கம் அடைந்தால் அதற்கு அடிமையாகிவிடுவான் என உளவியல் கூறுகிறது.

தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்ட பலர் மஸ்ஜிதுடைய  சூழலுக்குள் தொடர்ச்சியாக சில காலங்களுக்கு தம்மை உட்படுத்தியதன் காரணமாக மிகச் சிறந்த நன்னடத்தை உடையவர்களாக மாறியிருப்பதை சமூகத்தில் பரவலாக காணலாம்.

இன்று மனிதர்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகியும் அல்லது வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள தெரியாது பிறழ்வுகளுடனும்,உளத்தாக்கங்களுடனும் 
தத்தளிப்பதை அதிகம்  காணலாம்.இவ்வாறான நிலையில் தமது சூழலை மாற்றி நற்சூழலில் பயிற்சியனை பெற முயற்சிக்க வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு ஊரிலும் சூழல் மாற்றத்திற்கான  அமைதியான இடம் அல்லது நிறுவனம் ஏற்படுத்தப்பட வேண்டும்.அங்கு மார்க்க,உளவியல் போதனைகள் இடம்பெறவேண்டும் அத்தோடு வாழ்க்கை சவால்களை வெற்றிகொள்ளும் முறைகள் போதிக்கப்பட வேண்டும்.

உணவு உட்பட ஏனைய அன்றாட வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் அதற்கு கட்டணமும் அறவிடப்பட வேண்டும்.(கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவலாம் ஆனால் கட்டணம் செலுத்தாத சேவையாக இருந்தால் ஆட்களை திருத்துகின்ற இடம் என்ற மனோநிலையும் கெளரவ குறைச்சலும் ஏற்பட்டு தமக்குள் பிரச்சினைகளை உணர்வோர் போவதற்கு தயங்கலாம்.கட்டணம் செலுத்தும் போது விடுதியில் அல்லது ஹொட்டலில் சில காலங்களை கழிப்பது  போன்ற ஓர் மனோநிலையை ஏற்படுத்தி நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய தன்மையை ஏற்படுத்தலாம்.)

இங்கு வாழ்க்கை முறையை மாற்ற விரும்பியவர்கள்,சூழல் பிறழ்வுகளிலிருந்து தம்மை பாதுகாக்க முனைபவர்கள்,அமைதியை விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கி நேர அட்டவணையின்படி பயிற்சி எடுப்பதன் வாயிலாக உளத்தாக்கங்கலிலிருந்தும் பிறழ்வுகளிலிருந்தும் தம்மை பாதுகாத்து நல்வாழ்வு வாழலாம்.இதனை வாழ்க்கை வழிகாட்டல் நிலையம் என்று கூட அழைக்கலாம்.

எனவே சூழல் மாற்றத்திற்கான ஓர் நிறுவனம் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

(ஒரு துறை அல்லது நிறுவனம் வெற்றியடைய 3தரப்பினர் மிக அவசியம்.அவர்கள் 1.கொள்கை வகுப்பாளர்கள்2.நிதி பங்களிப்பாளர்கள் 3.அர்ப்பணிப்புள்ள தொண்டர் அணியினர் ஆகியோராகும்.)

ஏ.எம்.ஆரிப்,நிந்தவூர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.