கஹட்டோவிட்ட பத்ரியாவின் உயர்தர கலை, வர்த்தக விசேட செயற்றிட்டம் குறித்த அறிமுகக் கூட்டம் (படங்கள் இணைப்பு)

  Fayasa Fasil
By -
0

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான  வழிகாட்டல் செயலமர்வு  அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை  (17) காலை நடைபெற்றது. 

பத்ரியா அபிவிருத்தி போரத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்செயலமர்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து பயன்பெற்றனர். 

பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  உயர் தர கலை, வர்த்தக துறைகளில் காணப்படும் கற்கைத் துறைகள் மற்றும் ஒவ்வொரு கற்கைத் துறைகளிலும் காணப்படும் பல்கலைக்கழக வாய்ப்புக்கள் என்பன பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது. 

அத்துடன், 2025 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பத்ரியா அபிவிருத்தி போரத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட செயற்திட்டம் குறித்தும் இதன்போது அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில், கம்பஹா கல்வி வலய மட்டத்தில் எமது பாடசாலைக்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரிய ஆலோசகர் எம்.ரி.எம். ஸயான், பிரதி அதிபர், உதவி அதிபர்கள்,  உயர் தரத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், பத்ரியா அபிவிருத்தி போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 


எம்.எம்.மொஹிடீன் ஆசிரியர் 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)