அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரிப்பு

 வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி வருமானம், இந்த வருடத்தின் அதே காலப்பகுதியில் 696.9 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் கம்பனிகள் மற்றும் கம்பனிகள் அல்லாத நிறுவனங்களிடமிருந்து அதிக வரி வருவானம் ஈட்டப்பட்டுள்ளது.

இவற்றினூடாக 243.8 பில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சூதாட்டத்தினூடாக திரட்டப்பட்ட வரி வருமானம் 2.5 பில்லியன் ரூபாவாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.