சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சீனா அரச உதவியால் அமைக்கப்படும் மூன்று மாடி அதி நவீன சத்திர சிகிச்சை கட்டடத் தொகுதி மிக விரைவில் ஆரம்பம்

கடந்த 2019 ம் ஆண்டு சீன அரசின் உதவியால் அமைக்கப்படும் மூன்று மாடி அதி நவீன சத்திர சிகிச்சை கட்டடத் தொகுதியானது 95% நிறைவுற்ற நிலையில் கடந்த ஒரு வருட காலமாக வேலைகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது இதனை அடுத்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. ஆசாத் மற்றும் அதன் நிர்வாகத்தோடு இணைந்து Dr. இஸ்ஸடீன் தலைமையலான தற்போதைய வைத்தியசாலை அபிவிருத்தி குழு இதனை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனும் நன் முயற்சியில் பல்வேறு கூட்டங்கள், பிரயத்தனங்களை மேற்கொண்டு இதனை அதி மேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கவத்திற்கு கொண்டு சென்றதன் பலனாக 2023/04/27ம் திகதி PS/PR/13/484902 எனும் இலக்கமிடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இதனை மீள ஆரம்பித்து மக்களின் பாவனைக்காக கையளிக்கும் வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உதவிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் ஜனாப் எம்.எம். நயீமுடீன் மற்றும் ஜனாதிபதியின் இணைப்பார் லசந்த குணவர்தன அவர்களுக்கும் இது தொடர்பாக செயற்பட்ட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் இன்னும் பல நல்லுள்ளங்களுக்கும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு நன்றிகளை தெரிவித்து கொண்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.