ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவுஅனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானை பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் நாளை (01) காலை 10.00 மணி வரை மருதானை தொழில்நுட்ப சந்தியில் இருந்து கோட்டை ரயில்  நிலையம் வரையான நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்தும் ஏனைய மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.