நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய விசேட குழு நியமனம்
அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம் அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, டி.வீ. சானக, விஜித ஹேரத், மஹிந்தானந்த அலுத்கமகே, இரான் விக்கிரமரத்ன, அஸோக அபேசிங்ஹ, ஜயந்த கெட்டகொட, ஹர்ஷண ராஜகருணா, கலாநிதி. மேஜர் பிரதீப் உந்துகொட, சஞ்ஜீவ எதிரிமான்ன, நாலக பண்டார கோட்டேகொட, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக