இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று (29) 7.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிலோமீற்றர் (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிலோமீற்றர் (320.63 மைல்) மிக ஆழமாகவும் இருந்தது என (EMSC) தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.