நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 90,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி 27,885 குடும்பங்களைச் சேர்ந்த 89,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.