திருகோணமலையில் சிப்பாய் ஒருவர் மாயம்
திருகோணமலை - மொரவௌ விமானப்படை முகாமின் பயிற்சி நிலை சிப்பாய் ஒருவர் டி-56 ரக துப்பாக்கி ஒன்றுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவௌ காட்டுப்பகுதியில் ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று (19) மாலை அவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
காலி - வக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய விமானப்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக