மத்திய வங்கியின் நாணய சபையினால் Bimputh Finance நிறுவனத்தின் உரிமம் இரத்து!


இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் பட்டியலிடப்பட்ட Bimputh Finance நிதி நிறுவனத்தின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட பல பொதுவான அறிவுறுத்தல்கள், விதிகள் தொடர்ச்சியாக மீறப்பட்டதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மூலதன மட்டம் இல்லாமை, தரம் குறைந்த சொத்துகள், தொடர்ச்சியாக பதிவாகியுள்ள இழப்புகள் காரணமாக நிறுவனத்தின் நிதி நிலைமை மேலும் பலவீனமடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், Bimputh Finance-இன் உரிமம் இரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.