▪️பகிடிவதைக்கு எதிரான தேசிய குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

▪️அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

▪️கடந்த 12 மாதங்களில் 36  பகிடிவதை  சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அது தொடர்பில்  57 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

▪️கடந்த மாதத்தில் மாத்திரம் 12 பகிடிவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.