திருகோணமலை மெகெய்ஸர் மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் பெட்மிண்டன் சுற்றுப் போட்டியில் ஆண்களுக்கான 16 வயதுப் பிரிவில் விளையாடிய கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய  மாணவர்கள் மூன்றாம் இடத்தினை பெற்று 
பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக மாகாண மட்ட பெரு விளையாட்டுக்களில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி வரலாற்று வெற்றியினை பதிவு செய்தனர்.

இவ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்து வழிகாட்டிய பாடசாலையின்  உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.ஜே.எம்.சஸான், எம்.ஏ.எம்.றிஸ்மி, எம்.எம். புஹாரி மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஜே.எம். சாபித்,எம்.ஜே.எம். முபீத்,மேலும் இம் மாணவர் அணியினரின் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு பெட்மிண்டன் விளையாட்டுத் தளத்தினை வழங்கிய கல்முனை WINNERS BADMINTON COURT உரிமையாளர் மற்றும் மாணவர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கப்படுத்தி  பல ஆலோசனைகளையும் வழங்கி உதவிய பெட்மின்டன் பயிற்றுவிப்பாளர்களுக்கும் கல்முனை கல்வி வலய உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித் மற்றும் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹீம் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக்,ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
கல்விசாரா ஊழியர்கள்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர்,பழைய மாணவர்கள்,
பெற்றோர்கள்,பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.

( எம்.என்.எம்.அப்ராஸ்) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.