நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி சபை தேர்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐந்து முஸ்லிம்கள் தெரி வாகியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவானவர்களின் பெயர்ப்பட்டியல் 2438/67 இலக்க விசேட வர்த்தமானி மூலம் நேற்று (31) வெளியிடப்பட்டிருந்தது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இதுவரை தெரிவானர்களின் பெயர்ப்பட்டியலின் அடிப்படையில் திஹாரிய வட்டாரத்தில் இருந்து மொஹமட் பைரூஸ் மொஹமட் பாயிஸ், மாதலான வட்டாரத்தில் இருந்து மொஹமட் சித்தீக் மொஹமட் , கஹட்டோவிட்ட வட்டாரத்தில் இருந்து மொஹமட் ரஸாக்டீன் மொஹமட் இன்ஷாப் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
பட்டியல் அங்கத்தவர்களாக அப்துல் பாரி கௌஸுல் பிர்தௌஸ் தாவூத் மக்பூல் ஆகியோரின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வகையில் 53 பேர் கொண்ட அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐந்து முஸ்லிம்கள் இம்முறை தெளிவாகியுள்ளனர். சில கட்சிகளின் பட்டியல் உறுப்பினர்கள் இதுவரை உறுதி செய்யப்படாததால் இந்த வர்த்தமானியில் பெயர்கள் வெளியாகவில்லை
அத்தனகல்ல பிரதேச சபையில் NPP அங்கத்தவர்கள் 30, ஐக்கிய மக்கள் சக்தி 8, SLPP 5, சர்வஜன அதிகாரம் 3, PA 3, ஐக்கிய தேசியக் கட்சி 2, ஐக்கிய தேசியக் கூட்டணி 2 அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.