14 வயதின் கீழ் பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா 2 ஆம் சுற்றுக்கு தகுதி

Rihmy Hakeem
By -
0

GAMPAHA SCHOOL'S FOOT BALL இனால் நடாத்தப்படும் 14 வயதின் கீழ் பாடசாலை மட்ட "சமபோஷ" கால்பந்தாட்ட போட்டித் தொடர் இன்று (16) கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் ஆரம்பமானது. 

குழு ஒன்றில் தலா மூன்று அணிகள் மோதும் இச் சுற்றுப்போட்டியின் முதலாவது ஆட்டத்தில், கஹட்டோவிட்ட அல் பத்ரியா அணி சித்தார்த்த மகா வித்தியாலய அணியை 2 - 0 என்ற கோல் அடிப்படையில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டியில், எதிர் அணியான சென் மேரிஸ் வராததால் அல் பத்ரியா அணி போட்டியின்றி வென்றதுடன், இரண்டாவது சுற்றுக்கும் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)