கோடி ரூபாய் செலவில் விவசாயிகளிடமிருந்து பூசணியினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0

விவசாயியை சுரண்டும் இடை முகவர்களின் வேலைக்கு இடமளிக்கப் போவதில்லை என விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார். ஒரு கோடி ரூபா செலவில் பூசணிக்காயினை கொள்வனவு செய்யும் அரசின் வேலைத்திட்டத்தினை அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நொச்சியாகம மற்றும் விலச்சிய பிரதேசங்களில், பூசணிக்காய் பயிரிடும் ஒரு விவசாயியிடமிருந்து 1500 கிலோ கிராம்களை ஒரு கிலோ கிராமிற்கு ரூபா 30 படி விவசாய கேந்திர நிலையம் ஊடாக கொள்வனவு செய்யவுள்ளதாகவும், இதற்காக அரசு ரூபா ஒரு கோடியினை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்த பிறகு, ஒரு கிலோ கிராம் பூசணியின் மொத்த விலை ரூபா 5 இல் இருந்து 20 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கொழும்பில் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை ரூபா 70, ரூபா 80 வரை உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நொச்சியாகம மற்றும் விலச்சிய பிரதேச விவசாய கேந்திர நிலையங்களில் நடைபெற்ற அரசினது பூசணிக்காய் கொள்வனவு செய்யும் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் அமைச்சின் செயலாளர் கே.டீம்.எஸ்.ருவன்சந்திர, அநுராதபுர மாவட்ட செயலாளர் டப்ளியூ.எம்.வன்னிநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













கஹட்டோவிட்ட ரிஹ்மி
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)