சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்?

Rihmy Hakeem
By -
0

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக, கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதகாவும் சு.கவின் 15 தொகுதி அமைப்பாளர்கள், சந்திரிகாவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்.
இதன் அடிப்படையிலேயே அவரை, பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
(TamilMirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)