ரிஸ்வி ஜவ்ஹர்ஷா வெற்றிக்கிண்ணம்! : ஹொரம்பாவ "Fit Friends" சம்பியன்

Rihmy Hakeem
By -
0



விசினவ சியம்பலாகஸ் கொடுவ இளைஞர் கழகம் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா.குருநாகல் மாவட்ட பிரதிச் செயலாளர் சித்தீக் அவர்களுடன் இணைந்து  ஏற்பாடு செய்திருந்த  விசினவ விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2019 ஜனவரி கடந்த 13,14 ஆம் திகதிகளில் சியம்பலா கஸ்கொடுவையில் நடைபெற்றது.

இச் சுற்றுப் போட்டியில் விசினவயைச் சேர்ந்த சுமார்  "24" விளையாட்டு கழகங்கள்  கலந்து கொண்டு சிறப்பித்துடன்.

இறுதிப்போட்டி  ஹொரம்பாவ "Fit Friends " மற்றும் மடிவெல கெதர " AL Aqsa" விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்று இறுதியில் ஹொரம்பாவ "Fit Friends" அணியினர் "ரிஸ்வி ஜவ்ஹர்ஷா வெற்றிக் கிண்ணத்தை" சுவீகரித்துக்கொண்டது.

 இப்போட்டியின் இருதி நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் மு.வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி  ஜவ்ஹர்ஷா, ஸ்ரீ.ல.மு.கா. குருநாகல் மாவட்ட பிரதி அமைப்பாளர் சுலைமான் M.ராபி,  இப்போட்டியிற்கு அனுசரணை வழங்கிய எரம்கோ வெளிநாட்டு முகவர் நிலைய அதிபர் ஸ்ரீ.ல.மு.கா. குருநாகல் வலய இளைஞர் அமைப்பாளர் சகோ இர்பான், இப்போட்டியின் ஆளோசஹர் ஸ்ரீ.ல.மு.கா மாவட்ட பிரதிச் செயலாளர் சகோ சித்தீக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பர்ஸான்,ஹயாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கழந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுலைமான் M.ராபி
ஸ்ரீ.ல.மு.கா. குருநாகல் மாவட்ட பிரதி அமைப்பாளர் 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)