வெயாங்கொட சியனே கழகத்தை வீழ்த்தி கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் கழகம் சம்பியன்

Rihmy Hakeem
By -
0
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)


சென்ற சனிக்கிழமைை (09) இலங்கை இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அத்தனகல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் கஹட்டோவிட்ட பத்ரியன்ஸ் இளைஞர் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

 இறுதிப் போட்டியில் வெயாங்கொட சியனே கழகத்தை 3 - 1 என்ற ரீதியில் வீழ்த்தியதன் மூலம் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவின் இவ்வாண்டுக்கான கால்பந்து சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. அரையிறுதியில் பத்ரியன்ஸ் கழகம் கஹட்டோவிட்ட பாதிபியன்ஸ் இனை வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)