இலங்கையில் அனர்த்தங்கள் ஏற்படும் போது ஐ.நா. உதவும்

Rihmy Hakeem
By -
0

ஐ.நா. இன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோர்ன் ஸொரென்ஸன் (Jorn Sorenson) மற்றும் ஐ.நா. இன் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா ஸிங்கர் ஆகியோர் நேற்றைய தினம் (27) பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களை அவரது அமைச்சில் சந்தித்தார்கள். 

இலங்கையானது விரைவான காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு நாடு என்று ஐ.நா. அறிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், இலங்கைக்குத் தேவைப்படும் உதவிகளை செய்வதாகவும் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மற்றும் அரச சேவையின் தரத்தினை உயர்த்துவதற்கு ஐ.நா. இன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களால் செய்ய முடியுமான பங்களிப்புக்கள் பற்றியும் உரையாடப்பட்டது. இதன் போது அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)