இன்று (01) இலிருந்து சீகிரியா மலைக்குன்றினை பார்வையிடுவதற்கு வருகை தரும் போது பொலிதீன், பிலாஸ்டிக் கொண்டு செல்வதை தடை செய்வதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், மத்திய கலாச்சார நிதியம், பாதுகாப்பு பிரிவு மற்றும் பல பணியாளர்கள் ஒன்றிணைந்து சீகிரியா மலைக்குன்றினை பார்வையிடுவதற்கு வருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பயணப்பொதிகளை பரிசீலித்து அதன் போது எடுத்து செல்கின்ற பொலிதீன் மற்றும் பிலாஸ்டிக் திரௌவியங்களை அகற்றும் வேலைத் திட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு இடங்களில் குறித்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.