கடற்படையின் பொறுப்பற்ற நடவடிக்கையால் வபாத்தான இளைஞர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்

Rihmy Hakeem
By -
0
கிண்ணியா சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் 

தலா ஐம்பதாயிரம் ரூபா அன்பளிப்பு  வழங்கிவைப்பு 




கடந்த இரு தினங்களுக்கு  முன்பு கிண்ணியாவில் மண் அகழ்வின் போது  உயிரிழந்த  இருவரது வீடுகளுக்கு கலாநிதி எம் .எல் .எ. எம்  ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்து , இரு சகோதர்களின் குடும்பத்திற்கு மாகாண நிதியில் இருந்து  தலா ஐம்பது ஆயிரம் ரூபா காசோலை  வழங்கிவைத்தார் .


இன்று (31.01.2019) விஜயம் செய்த கிழக்கு ஆளுநர் இந்த அன்பளிப்பினை வழங்கிவைத்தார் . இதன் போது இவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் வழங்கினார் . 

இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் மண் அகழ்வது , மரங்கள் வெட்டுதல் போன்றவை எங்களது வாழ்வாதார தொழில் எனவும் அதை சட்டரீதியாக செய்வதறகு அனுமதியை பெற்று தருமாறு ஆளுநரிடம்  கோரிக்கை விடுத்தனர் . இதற்கு பதிலளித்த கிழக்கு ஆளுநர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம்  கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் .


இதன் போது கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் , பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)