பிரதேசத்திலுள்ள நோயாளிகளை சுகம் விசாரிக்கச் சென்ற கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிறுவன ஹிப்ழ் வகுப்பு மாணவர்கள்

Rihmy Hakeem
By -
0

சென்ற வெள்ளிக்கிழமை (15) கஹட்டோவிட்டவில் அமைந்திருக்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிறுவனத்தில் நடைபெற்று வரும் குர்ஆன் மனன பிரிவின் மாணவர்கள் பிரதேசத்தில் உள்ள நோயாளர்களை நலம் விசாரிக்க சென்றார்கள்.

நோயாளிகளின் நலம் விசாரித்தல் இஸ்லாத்தினுடைய முக்கிய ஸுன்னா என்பதுடன், வளர்ந்து வரும் மாணவர்கள் மனதில் நோயாளர்கள் மீதான கருணையை ஏற்படுத்தவும் குறித்த பழக்கங்களை இளமையிலே அவர்களிடத்தில் ஏற்படுத்துவதற்கும் இதனை குறித்த நிறுவன நிர்வாகிகள் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)