ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹடோவிட மத்திய குழுவின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள்

Rihmy Hakeem
By -
1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹடோவிட மத்திய குழுவின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹடோவிட  மத்திய குழுவின்  கூட்டம் கட்சியின் உயர்பீட உறுப்பினர் அல்ஹாஜ் M.N.M.ஜவுஸி J.P. அவர்களின் தலைமையில் நேற்று (24.02) இரவு கூடியது.

இக்கூட்டத்திலே கஹடோவிட, கஹடோவிட மேற்கு, ஓகொடபொல, குரவலான ஆகிய  கிராம அலுவலர் பிரிவுகளை  உள்ளடங்கிய  கஹடோவிட வட்டாரத்தின் மத்திய குழுவின் புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக  மாகாண சபை வேட்பாளர்  அல்ஹாஜ் முஸ்தாக் மதனி அவர்களும் செயலாளராக கட்சியின் உயர்பீட உறுப்பினர் அல்ஹாஜ் M.N.M. ஜவுஸி J.P. அவர்களும், பொருளாராக பிரதேச சபை வேட்பாளர் மாஸ்டர் ரம்ஸான் ஹுஸைன் அவர்களும், உப தலைவராக கஹடோவிட வட்டார வேட்பாளர் A.H.M.அஸாம் M.B.c அவர்களும், உப செயலாளராக ரய்யான் ஈஸா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நான்கு கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து தலா நான்கு பேர் விகிதம் 16 மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

(நாஸர் JP)

கருத்துரையிடுக

1கருத்துகள்

கருத்துரையிடுக