DIG லதீப் தலைமையிலான குழு டுபாய் செல்ல ஆயத்தமாகிறது (முன்பு வெளியான செய்தி பிழையானது)

Rihmy Hakeem
By -
0
பொலிஸ் அதிரடிப்படை கட்டளைத் தளபதியும், திட்டமிட்ட குற்றங்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுகளின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான எம்.ஆர்.லதீப் தல‍ைமையிலான சிறப்பு பாதுகாப்பு குழுவினர் டுபாய் நோக்கிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
மதூஷ் டுபாயை மையப்படுத்தி முன்னெடுத்த போதைப் பொருள்  வர்த்தகம் மற்றும் அவரது வலையமைப்பு தொடர்பிலான தகவல்களை டுபாய் பொலிசாருக்கு முன்வைத்து மதூஷை இலங்கைக்கு அழைத்து தொடர்பில் ஆராயாவே, அவர் தலமையில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும்  அதிரடிப் படை குழுவொன்று டுபாய்க்கு செல்லவுள்ளனர்.
மாகந்துரே மதூஷ் மீது போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டு மட்டும் சுமத்தப்பட்டு இலகு ரக தண்டனை ஒன்று விதிக்கப்படும் வாய்ப்புக்கள் குறித்து பேசப்படும் நிலையிலேயே, அதனையடுத்து மதூஷை இலங்கைக்கு அழைத்துவந்து அவரது கணக்கில் குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இந்த குழு டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளது.

(இதற்கு முதல் வெளியான செய்தி பிழையானது ஆகும். தவறுக்கு வருந்துகிறோம்)
-Virakesari

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)