பிரதான இரு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று

www.paewai.com
By -
0

ஹம்பாந்தோட்டை மிரிஞ்சவில பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் கூடிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை ஆகியவற்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்றது.

குறித்த திட்டம் ஹம்பாந்தோட்டை சுதந்திர வர்த்தக வலயத்திலேயே முன்னெடுக்கப்பட உள்ளது.


இந்நிகழ்வில் விசேட அதிதியாக ஓமான் நாட்டின் பெற்றோலிய மற்றும் எரிவாயு அமைச்சர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த திட்டத்துக்கு செலவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிதியில் ஒரு பகுதியை ஓமான் அரசாங்கம் வழங்க உள்ளதாக பிரதமர் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் 70 ஆவது பிறந்த தினமாகும்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)