இலங்கையில் உள்ள அதிகமான ஆவணங்கள் போலி!

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   நாட்டில் காணி உறுதிப் பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என, பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
   பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் ஐந்தில் ஒன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாக,  பதிவாளர் நாயகம் என்.சி.  விதானகே குறிப்பிட்டுள்ளார்.
  குழந்தைகளைப்  பாடசாலைகளுக்குச்  சேர்ப்பதற்காகவும் வங்கிக்கடன்களைப் பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக இவ்வாறான போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
   இதேவேளை, நவீன தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி, அனைத்து காணி, பிறப்புச் சான்றிதழ்களை,  கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகள்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
   இந்த வருடம் முதல், நடைமுறைப்படுத்தப்படும் வகையில், இலங்கைப்  பிரஜைகளின் தகவல்களைக்  கணினி மயமாக்கவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
   இதன்பிரகாரம்,  பிறக்கும் குழந்தைகளுக்கு இலக்கமொன்று வழங்கப்படுவதுடன், அதனையே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப்  பயன்படுத்துவதற்கும், தேசிய அடையாள அட்டையைப்  பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்குப்  பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுத்தவுள்ளதாகவும்  திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)