இளைஞர் யுவதிகளுக்கு சுபீட்சமான எதிர்காலத்தினை ஏற்படுத்திக் கொடுப்பததே எமது இலக்கு

www.paewai.com
By -
0

நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சுபீட்சமான எதிர்காலத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே சாபம் மற்றும் அவமதிப்புகளுக்கு மத்தியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து கரடு முரடான பாதைகளின் ஊடாக அரசாங்கமானது பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் முன்னோக்கி வந்தது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (30) ஹம்பாந்தோட்டை, வீரவிலயில் இடம்பெற்ற தேசிய யொவுன்புற 2019 நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அன்று இலங்கைக்கு பின்னால் இருந்த நாடுகள் இன்று அபிவிருத்தியடைந்து முன்னோக்கி வந்துள்ளதாகவும், அந்த நிலையினை மாற்றி இதற்கு பின்னர் நாடொன்றுக்கு எம்மை பின்தள்ளி முன்னோக்கிச் செல்வதற்கு வாய்ப்பளிக்க மாட்டோம் எனவும் பிரதமர் அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்தார். 

10ஆவது தேசிய யொவுன்புற நிகழ்வுகள் வீரவில கால்நடை வளங்கள் அபிவிருத்தி நிலைய பூமியில் இடம்பெற்றதுடன், அதில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுமார் 8000க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர். 

29, 30ம் திகதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மாவட்ட மட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த இளைஞர் முகாம்களுக்கு சென்று இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொண்டதுடன், அவர்களுடன் நட்புறவு ரீதியாக நடந்து கொண்டமை அனைவராலும் பாராட்டப்பட்டது. 

தேசிய யொவுன்புற நிறைவு நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் அவர்கள்,

தேசிய இளைஞர் சேவை மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஞாபக முத்திரையொன்று இன்று என்னிடம் வழங்கப்பட்டது. முதலாவது யொவுன்புற நிகழ்வில் கலந்து கொண்ட கம்பஹா இளைஞர் கழகத்தின் ரன்ஜித் ஆரியரத்ன அவர்களே எனக்கு குறித்த முத்திரையினை முதலில் வழங்கினார். இன்று 10ஆவது யொவுன்புற நிகழ்வினை நாம் வீரவில பிரதேசதத்தில் நடாத்துகின்றோம்.

இந்த யொவுன்புற நிகழ்வில் இளைஞர்களின் கருத்துக்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள், இளைஞர்களின் கனவுகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவை ஓரிடத்தில் குவிந்துள்ளன. நாம் அவை தொடர்பில் கலந்துரையாடுகின்றோம். அவை உமது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. அதன் காரணமாகவே இன்றைய தினம் இந்த யொவுன்புற நிகழ்வினை உங்களது எதிர்காலத்தினை தீர்மானிக்கின்ற ஹம்பாந்தோட்;டை நகரினை மையமாகக் கொண்டு நடாத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். இளைய தலைமுறையினராகிய நீங்கள் வாழ்வதற்கு நல்லதொரு எதிர்காலம் தேவைப்படுகின்றது.

எமது பெற்றோர்களின் இளம் பராயத்தில், இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் அபிவிருத்தி மட்டத்தில் நாம் ஆசியாவில் ஜப்பான் நாட்டுடன் சரிநிகராக திகழ்ந்தோம். ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் ஜனாதிபதியான சந்தர்ப்பத்தில் எமக்கு முன்னால் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இருந்தன. நாம் அபிவிருத்திக்கான போட்டியின் போது சிறு பின்னடைவினை எதிர்நோக்கி இருந்தோம். அதனால் அன்று எமது பொருளாதாரத்தினை திறந்து விட தீர்மானித்தோம். எனினும் நாட்டினுள் யுத்த சூழ்நிலை உருவானது. 2001ம் ஆண்டு நாங்கள் நாட்டினை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் பங்களாதேசம், வியட்நாம் மற்றும் இந்துனேஷpயா ஆகிய நாடுகளும் இலங்கையினை பின்தொடர்ந்தே காணப்பட்டன. 



எனினும் துரதிஷ;டவசமாக இம்முறை நாம் ஆட்சியினை கைப்பற்றிய சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் காலத்தில் அந்த நாடுகள் எம்மை பின்தள்ளிவிட்டு அபிவிருத்தியினை அடைந்துள்ளன. இன்று அவர்களின் கையிருப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டின் மக்கள் எமது நாட்டு மக்களை விட பாதுகாப்பான முறையில் வாழ்ந்து வருகின்றனர். அதனால் 2015ம் ஆண்டு நாட் ஆட்சிபீடம் ஏறிய போது அபிவிருத்தியினை அடைந்துக் கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பம் இதுவென நாம் அறிந்து கொண்டோம். நாம் தற்போது நாட்டினை கைவிட்டால் நாடு அதள பாதாளத்திற்கே போய்விடும் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். அதனால் நாட்டின் பொருளாதாரத்தினுள் பாரிய மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.

2017ம் ஆண்டு கப்பல் ஏதும் வராத நிலையிலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் சைனா மர்சன்ட் கம்பனியும் இணைந்து முன்னெடுக்கின்ற ஒன்றிணைந்த கம்பனிக்கு ஒப்படைத்தோம். இன்று நான் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை பார்வையிட்ட சந்தர்ப்பத்தில் இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த வாகனங்களை பார்வையிட்டேன். அவ்வாறான பாரியளவிலான முன்னேற்றத்தினை இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் அடைந்திருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை வலயத்தின் வியாபார கேந்திர நிலையமாக மாற்றியமைப்போம். பல்வேறு வாகனங்கள், பல்வேறு பொருட்கள் இத்துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்வோம்.

அதன்போது, மியன்மார் போன்ற இவ்வலய நாடுகளின் மக்களுக்கு இத்துறைமுகத்துக்கு வருகை தந்து விருப்பமான விடயங்களை கொள்வனவு செய்து கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோன்று நான் லார்ப் எரிவாயு கம்பனியின் எல்.பீ.ஜி. எரிவாயு களஞ்சியசாலையினை பார்வையிடுவதற்கும் சென்றிருந்தேன். அது இந்திய வலயத்தினுள் அமையப்பெற்றுள்ள விசாலமான மற்றும் நவீன ரக எல்.பீ.ஜீ. எரிவாயு களஞ்சியசாலையாகும். இவ்வாறான நவீன ரக எல்.பீ.ஜீ. எரிவாயு களஞ்சியசாலையொன்று இந்தியாவில் கூட இல்லை என்பதை நான் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. சென்ற வாரம் ஹம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நடுவதற்கும் எமக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னர் இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டது நான் பல்கலைக்கழகத்திற்கு உள்நுழைந்த 1967ம் ஆண்டிலாகும். அதன் பின்னர் இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றுக்கான அடிக்கல் நடப்பட்டது சுமார் 60 வருடங்களின் பின்னரே. அதுவும் எமது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் என்பது குறிப்பிடத்தக்கது. 



எற்றுமதி நடவடிக்கைகளுக்காகவே இந்த எரிபொருள் சுத்தகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதேபோன்று விசாலமான சீமெந்து கைத்தொழிற்சாலையொன்றை ஆரம்பிப்பதற்கும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மத்தள விமான நிலையத்தினை இலங்கை, இந்தியா சிவில் விமான சேவை அதிகார சபைகளும் இணைந்து நிர்வகிப்பதற்கு தேவையான விடயங்களை தயாரித்துள்ளோம். அவ்வாறான விசாலமான மாற்றமொன்றை நாம் இந்த பகுதிக்கு கொண்டு வரவுள்ளோம். 5000 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்ட தென் ஆசியாவின் விசாலமான வர்த்தக வலயமாக நாம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்க உள்ளோம். அதன் பின்னர் மொனராகலையில் வர்த்தக வலயமொன்றை ஆரம்பிப்போம்.

பிங்கிரிய முதலீட்டு வலயத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதன் முதல் கட்ட நிர்மாணப் பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. 'ஸ்மார்ட் சேர்ட்' நிறுவனமானது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் கைத்தொழில்சாலை ஒன்றை அங்கு ஆரம்பிக்க உள்ளது. 

கண்டியிலுருந்து கொழும்பு வரை அதிவேக வீதியொன்றை நாம் அமைத்து வருகின்றோம். கொழும்பில் இருந்து துறைமுகம் வரை புதிய பெருந்தெரு வொன்றை நிர்மாணிக்க உள்ளோம். ராஜகிரியவிலிருந்து தூண்களின் மீது செல்கின்ற வீதியொன்றை நிர்மாணிக்கின்றோம். இலகு ரக புகையிரத சேவையொன்றை ஆரம்பிக்க உள்ளோம். 2022ம் ஆண்டளவில் கண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கும், கொழும்பு பிரதேசத்திலும் புதிய வீதித்தொகுதிகள் அமைக்கப்படுகின்றது. 

இவ்வாறாக நாங்கள் நாட்டில் பொருளாதார புரட்சியொன்றை ஆரம்பித்துள்ளோம். சுற்றுலாத்துறையினை விருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக வேண்டி புதிய ஹோட்டல்கள், சுற்றுலா வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சிலர் இன்றும் கூட 'ஹோம் டுடே' நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 



அதேபோன்று நாட்டினுள் டிஜிட்டல்மயப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்போது ஏற்றுமதி மற்றும் ஏனைய சேவைகள் தகவல் தொழில்நுட்பம் ஊடாக இரண்டு அல்லது மூன்று மடங்கினால் அதிகரிக்கின்றது.  அதற்கு அவசியமான தொழில்நுட்ப பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இன்று நாட்டின் மீன்பிடி ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டாக வேண்டும். 
இப் பொருளாதார வளர்ச்சி வேகத்தினை இன்னும் 05 அல்லது 06 வருடங்களுக்கு சிராக பேணிச் செல்வதன் மூலம் ஆசியாவின் ஏனைய நாடுகளையும் பின்தள்ளிவிட்டு அபிவிருத்தி தொடர்பில் முன்னோக்கி செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதன்போது எமது நாட்டு மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலம் உருவாகும்.

கொழும்பு துறைமுகத்தினை விஸ்தரிப்பதற்கும், தெற்கு துறைமுக பிரிவினை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் போன்ற அனைத்தையும் அபிவிருத்தி செய்ய நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். இது உமது எதிர்காலமாகும். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் பாதுகாத்து கொண்டு முன்னோக்கிச் சென்வதன் மூலம் உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார, சமூக, கல்வியியல் ரீதியாக விருத்தி ஏற்படும்.

நாட்டினுள் கல்வித்துறையானது பாரியளவு முன்னேற்றத்தினை கண்டுள்ளது. 13 வருட கல்வியினை கட்டாயப்படுத்தல், இரண்டாம் நிலை கல்வியில் தொழில் கல்வியினையும் பெற்றுக் கொடுத்தல், கல்வியியற் கல்லூரிகளுக்கு இவ்வருடத்தில் மாத்திரம் டிப்ளோமாதாரிகள் 10,000 பேரினை ஆசிரியர் சேவையின் இணைத்துக் கொள்ளல் போன்ற பாரியளவிலான வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

இன்னும் 05 வருட காலத்தினுள் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கல்வி துறையில் காணப்பட மாட்டார்கள் என்பதை குறிப்பிட வேண்டும். பயிற்சி பெற்றுள்ள ஆசிரியர்களை மாத்திரமே நாம் எமது அரசாங்கத்தின் கீழ் இணைத்துக் கொள்வோம். பல்கலைக்கழகங்களுக்காக வீடுதி வசதிகளை அதிகரிப்பதற்கும் எமக்கு வாய்ப்பு கிடைத்தது. நவீன மருத்துவ பீடங்கள் மூன்றினை உருவாக்குவதற்கும், நவீன பொறியியல் பீடங்கள் 02 இனை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்ப பீடங்களை ஆரம்பிப்பதற்கும் தற்போது திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் 02 அல்லது 03 விஞ்ஞான பீடங்களை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

எமது தொழிற்பயிற்சிகளை நிர்மாணிக்கவுள்ளோம். சுகாதார துறையினை நவீனமயப்படுத்த உள்ளோம். இவ்வாறான முறையில் அனைத்து துறைகளையும் விருத்தி செய்வதற்கும் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.



அதேபோன்று நாட்டில் போதைப் பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு நாம் திட்டங்களை தயாரித்து நடைமுறைபடுத்தி வருகின்றோம். விசேடமாக அதற்காக காவல் துறை மற்றும் விசேட பொலிஸ் படையணி ஆகியவை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. நேற்றைய தினம் அதிகமான இளைஞர்கள் என்னிடம் தாம் இராணுவத்தில் அல்லது காவல் துறையில் சேர்ந்து செயற்படுவதற்கு விரும்புவதாக தெரிவித்தனர். காவல் துறையானது அன்று நாட்டில் சட்டத்தினை நிலைநாட்டுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையினருக்கு மதிப்பளிப்பது மற்றும் அதில் இணைந்து செயற்படுவது என்பது விசேடமான அம்சமாகும். இராணுவத்தில் இணைவதும் மிகவும் சிறந்த தீர்மானமாகும். இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகள் விருத்தியடைந்தது இராணுவ ஒழுக்க நெறிமுறையிலாகும். நாட்டின் ஒழுக்க மாண்பின் ஊடாக சமூக, பொருளாதார அபிவிருத்தியினை அடைந்துக் கொள்ள முடியும். அதனை 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றிவிட முடியாது. எனினும் நாம் ஆரம்பித்து முன்னெடுத்துவ வருகின்ற திட்டங்களை இன்னும் 05 அல்லது 06 வருடங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுத்தால் எமது நாடு அபிவிருத்தியடையும் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. 

அந்த சந்தர்ப்பத்தில் நாம் ஹம்பாந்தோட்டைக்கு சமூகமளிக்கும் போது எமக்கு அதனை இனங்கண்டு கொள்வதற்கும் கடினமாக இருக்கும்.  2017ம் ஆண்டளவில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றினை 5000 ரூபாவுக்கு வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கு எந்தவித கஷ;டமும் இருக்கவில்லை. எனினும் இன்று 15,000 ரூபாய்களுக்கு வீடொன்றினை வாடகைக்கு பெற்றுக் கொள்வதற்கு முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இன்னும் 02 - 03 வருடங்களாகும் போது அதன் பெறுமதி மேலும் அதிகரிக்கும் நிலைமையே இன்று உள்ளது. 

இவ்வாறான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஏன் இவ்வலவு காலம் தேவைப்பட்டது என பலர் என்னிடத்தில் கேள்வி எழுப்பினர்.  இந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு நிலையான பொருளாதாரம் ஒன்று தேவைப்படுகின்றது. நாங்கள் கடன் பெற்றால் அதனை திரும்பி செலுத்துவதற்கு எமக்கு சக்தி இருக்க வேண்டும். அவற்றினை செலுத்துவதற்கான சக்தியினை உருவாக்கிக் கொள்வதற்கு 02 - 03 ஆண்டுகள் செலவாகின. அதிகமான கடன் தொகையினை இவ்வருடத்திலேயே செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வருடத்தில் 5900 மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. அன்று பொதுமக்களின் கண்டனத்துக்கு உள்ளான போது மாகாண சபை தேர்தலில் தோல்வியினை தழுவிய சந்தர்ப்பத்தில் இவ்வேலைத்திட்டங்களை எமக்கு நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் இருந்தது. இதற்கு முன்னர் இருந்த நிர்வாகிகளை போன்று எமக்கும் பொய்களை கூறி அவர்களை ஏமாற்ற சந்தர்ப்பம் இருந்தது. எனினும், நாங்கள் அன்று அவ்வாறு செய்திருந்தால் இன்று இவ்வாறான பிரதிபலன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் எமக்கு கிடைக்காமல் போயிருந்திருக்கும். 

குற்றாச்சாட்டுகளுக்கு உள்ளாகி, விமர்சனங்களுக்கு உட்பட்டு, பொய்பிரசாரங்கள், தோல்விகள் ஆகியவற்றுக்கு முகங்கொடுத்து நாம் முன்னோக்கிச் சென்றோம். உங்களுக்கு முறையான எதிர்காலத்தினை ஏற்படுத்த வேண்டும் எனின், அச்சமின்றி பொதுமக்களுக்கு சரியான விடயங்களை தெரிவித்து, சரியான மார்க்கத்தின் ஊடாக பயணிக்க வேண்டியிருந்தது. நாங்கள் அவ்வாறு மேற்கொண்டால் மாத்திரமே முன்னோக்கி செல்ல முடியும் என்பதை நாம் உணர்ந்து செயற்பட்டோம். எப்போதாவது நாம் முன்னெடுத்து வந்த அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தி இருப்பின் இன்று இவ்வாறான பலன்களை பெற்றிருக்க முடியாது. உமது எதிர்காலத்தினை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வதே எமக்கு எதிர்பார்ப்பாகும்.

அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இளம் பராயத்தினர் வலுவூட்டப்பட வேண்டும். நாங்கள் இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட என்டர்பிறைஷஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக உமக்கு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் போது உமக்கு அந்த கடன் தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.  இளைஞர் சேவை மன்றம், இளைஞர் கழகங்கள் ஊடக குறித்த கடன் திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். அதற்காக அரச வங்கீகள், நிதியமைச்சு போன்ற அமைச்சுக்களின் சுய தொழில் பிரிவு போன்ற அனைத்து நிறுவனங்களும் அவற்றில் இணைந்துள்ளன. அந்த கடன் தொகையினை மே மாதத்திலிருந்து நீங்கள் அனுபவிக்க கூடியதாக இருக்கும்.

நீங்கள் திறமையானவர் எனின், உமக்கு முன்னோக்கி செல்ல முடியும். இங்கு உங்களது திறமைகளை இனங்கண்டு கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் தனித்தனி திறமைகள் இருப்பதை நாம் அறிவோம். அந்த திறமைகளுடன் நீங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் இளைஞர்களை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. 

இளம் பரம்பரையினருக்கு காணி உரிமைகளை வழங்க வேண்டும் என்ற யோசனையொன்றை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் முன்வைத்தார். அதனை அங்கீகரித்து முன்னோக்கி எடுத்துச் செல்ல உள்ளதாக நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். 

இளைஞர்களுக்கு மாத்திரமல்ல யுவதிகளுக்கும் பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என நான் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைவரிடத்தில் வேண்டிக் கொள்கின்றேன். 

இன்று இந்த நிகழ்ச்சிக்கு தலைமைத்துவம் வழங்குவது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் நாடு முழுவதும் வீடுகள் வழங்கும் அதே சந்தர்ப்பத்தில், இந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அவர்களின் தந்தையாரும் யொவுன்புறவிற்கு பாரியளவிலான பங்களிப்பினை வழங்கினார்.  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு 50 வருடங்கள் பூர்த்தியாகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இதனை ஆரம்பிப்பதற்கு தலைமைத்துவத்தினை வழங்கிய அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அவர்களையும் இவ்விடத்தில் ஞாபகமூட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன். 

அறநெறிப் பாடசாலை கல்வியினை மேம்படுத்துவதிலும் சஜித் பிரேமதாச அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதனை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதற்காக நிதியுதவிகளை வழங்குவதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம். தர்மம், பொருளாதாரம், சமூக விருத்தி, ஒழுக்கம், சந்தோஷம் போன்ற அனைத்து விடயங்களும் பொதுமக்களுக்கு அவசியமாகின்றது. அதனால் சஜித் பிரேமதாச அவர்கள் இப்பிரதேசத்துக்கு வழங்குகின்ற தலைமைத்துவம் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதே போன்று இந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்து வழிகளிலும் பங்களிப்பு செய்த அமைச்சர் சாகல ரத்னாயக அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் திலிப் வேதஆராச்சி அவர்களையும் பாராட்டியாக வேண்டும். அவரும் இதற்காக பெரிதும் பாடுபட்டவராவார்.

அதேபோன்று, இந்நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பினை நல்கிய ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர், காவல் துறையினர், இராணுவத்தினர், தபால் திணைக்கள உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இளம் பராயத்தினரின் கருத்துக்கள் உயிர்பெறுகின்ற இடமே இது, இதனை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்வோம். இதன் பிறகு வேறு நாடுகளுக்கு இரண்டாம் நிலைக்கு செல்லாமல், எமது இளம் பராயத்தினருக்காக நல்ல எதிர்காலத்தினை நிர்மாணிப்பதற்கும், பாதுகாப்பான சுகமான வாழ்க்கையினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த வேலைத்திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு உமக்கு ஒப்படைப்பதாக நான் இறுதியாக கேட்டுக் கொள்கின்றேன். 

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதமர் பணியாளர் சபை பிரதானி, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக, மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வேதஆராச்சி, தென் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ். தென்னகோன் நிலமே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் எரன்த வெலியங்க, இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க ஆகியோருடன் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.             

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)