நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து திருடிய சிறுவர்கள் மூவர் கைது!

Rihmy Hakeem
By -
0
தலவாக்கலை, திஸ்பனை சந்தியில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் உபகரணங்கள் சிலவற்றையும், 19 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 10,11 மற்றும் 14 வயதுகளையுடைய சிறுவர்கள் மூவர், லிந்துலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த மூவரையும், நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இதற்கு முன்னர் இடம்பெற்ற, ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் இந்த மூன்று சிறுவர்களுக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளதென  தெரிவித்தனர்.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)