மத்ரஸா தொடர்பான சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் உள்ள மதரஸாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது, மதரஸா கல்வி நிறுவனங்களைத் தடை செய்வது தொடர்பான சட்ட திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதேப்போல் மதரஸா என்ற பெயர்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வரும் வீசா அற்ற வெளிநாட்டு ஆசிரியர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

(Daily Mirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)