NTJ அமைப்பாளருக்கு 21 வரை ரிமாண்ட்

Rihmy Hakeem
By -
0
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். 

முன்னதாக குறித்த நபர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் கடந்த 02ம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

குறித்த நபர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக இதன்போது பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் குறித்த நபரிடமிருந்து தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

(அத தெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)