விமலுக்கு எதிராக ரிஷாத் முறைப்பாடு செய்தார்

Rihmy Hakeem
By -
0

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இன்று காலை 11 மணியளவில் அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்துள்ள பல பொய்யான குற்றச்சாட்டுக்களால் தான் உள்ளிட்ட முஸ்லிம் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். 

இதன் காரணமாக விமல் வீரவன்சவின் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கருத்துக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ததாக ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)