பொஹொட்டுவ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 

அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு தற்போது சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. 

இந்த நிகழ்வின் போது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(adaderana)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)