ஒப்பற்ற அரபுத் தமிழ் இலக்கியம் "முபாரக் மாலை"

Rihmy Hakeem
By -
0


இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு நீ்ண்டு செல்கிறது. முதலாவது தமிழ் தப்ஸீரை எழுதிய இமாமுஸ் ஸைலான் செய்ஹ் முஸ்தபா றஹ்மஹுல்லாஹ் அவர்களின் பாசறையில் வளர்ந்த காலி நகர் கவிமணி காதிர் சம்ஸூத்தீன் புலவரால் எழுதப்பட்ட காவியம் இதுவாகும்.

றஸூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புக்களை எழு பாகங்களாகப் பிரித்து எழுதியுள்ளார்கள். தமிழ் இலக்கியச் செறிவின் அடையாளமாக முபாரக் மாலை கருதப்படுகிறது.

றஸூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சிறப்புக்களை எழுதுவதற்கு தான் தகுதியானவரான என்று எழுதியுள்ளதன் மூலம் கவிஞரின் பணிவைப் புரிந்துகொள்ளலாம்.

"எழுத்து முதற் பஞ்சவிலக்கணமே யறியான்
வழுத்தும் தமிழுரையை வாயாலுரைக்க வறியான்; காலி நகர் கோட்டை காதிர் சம்ஸூத்தீன்"..... என்று தொடர்கிறது.

 "முபாரக் மாலை" கி.பி 1887 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)