ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி மக்கள் செல்லக்கூடிய சூழலை தற்போதைய
நிலைமை உருவாக்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர
குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் ஊழல் ஆகியவற்றை முன்னுரிமையாக கொண்டு மக்கள் ஆட்சியை மாற்ற முயற்சிப்பதாகவும் கட்சியினால் செய்யப்படும் தவறுகள் காலத்தினால் மறக்கடிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக, வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசியலுக்கான நல்ல சந்தர்ப்பம் எனவும் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி மக்கள் செல்லக்கூடிய சூழலை தற்போதைய நிலைமை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள அரசியல் அரங்கத்தை தூய அரசியலாக மாற்றுவற்கான வித்தியாசத்தை உருவாக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(AdaDerana)