போலி உம்ரா முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   குறைந்த கட்­ட­ணத்தில் உம்­ரா­வுக்கு அழைத்துச் செல்­வ­தாக வாக்குறு­தி­ய­ளித்து, மக்­க­ளி­ட­மி­ருந்து போலி உம்ரா உப முக­வர்கள் பணம் வசூ­லித்து வரு­வ­தா­கத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பில்,  பொதுமக்கள் எச்சரிக்கை­யாக இருக்­கு­மாறு,  அரச ஹஜ் குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. 

   பொதுமக்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அனு­ம­திப்­பத்­திரம் வழங்கப்­பட்­டுள்ள ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிலை­யங்­க­ளி­ன் ஊ­டா­கவே தங்­க­ளது பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 
அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் மற்றும் உம்ரா முகவர் நிலை­யங்­களின் விபரங்­களை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளு­மாறும் பயணிகள்  வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.

   போலி முக­வர்­க­ளிடம் உம்ராப் பய­ணத்­துக்­காக முற்­பணம் வழங்கி ஏமாற்­றப்­படும் பய­ணிகள் தொடர்பில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்­க­ளத்­தினால் சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது. இதன் காரணமாக,  பய­ணிகள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட முகவர் நிலை­யங்­க­ள் ஊ­டா­கவே தங்கள் பயணங்களை ஏற்­பாடு செய்­து கொள்ளும்படியும், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரீ. சியாத் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

   இதே­வேளை, 
5 வரு­ட­ கால எல்­லைக்குள் ஒன்­றுக்கு மேற்­பட்ட  பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்களிடம் சவூதி அரேபிய அரசு அறவிட்டு வந்த 2000 ரியால் கட்டணம், தற்போது நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)