சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க ஐக்கிய மக்கள் காங்கிரஸ் (UPC) தீர்மானம்.

Rihmy Hakeem
By -
0


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரிக்க நேற்று (26) இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் காங்கிரஸின் விஷேட உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக UPC யின் பொதுச்செயலாளரும் முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல் நாஸர் J.P. தெரிவித்தார்.

UPC யின் பிரதித் தலைவர் S.K.M.அஜ்மல் அவர்களினால் "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி சஜித் பிரேமதாஸ அவர்களை ஆதரிக்க வேண்டும்" என்று முன்மொழியப்பட்ட பிரேரணையை கட்சியின் தலைவர் சுஹைல் மொஹமட் அவர்களினால் அங்கீகரிக்கப்பட்டு உயர்பீட உறுப்பினர்களினதும் அங்கீகாரத்துடன் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)