நீர்கொழும்பு, ஜாஎல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா மற்றும் அத்தனகல்ல பகுதி மக்கள் அவதானம்

Rihmy Hakeem
By -
0

களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் பெய்த கடும் மழையின் காரணமாக குறித்த பகுதிகளுக்கு அருகில் வாழ்பவர்கள் அவதாகமாக இருக்குமாறு வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

விஷேடமாக களனி கங்கையின் நீர்மட்டம் நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் கலேன்கோஸ் ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அத்தனகலு ஓயாவின் துன்னமலே பகுதியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு, ஜாஎல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் அவதானமாக இருக்குமாறும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

(அத தெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)