ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் பாதுகாப்பினை வழங்குவதற்காக 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார், நடமாடும் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilmirror

