தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வட கிழக்கிற்கு வெளியிலும் சில மாவட்டங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கிலுள்ள மாவட்டங்களில் மட்டுமே போட்டியிட்டு வந்தது.
மேற்படி தீர்மானம் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பியதுடன் மேற்படி தீர்மானம் தொடர்பில் முக்கிய முடிவு எட்டப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் கூட்டமைப்பு போட்டியிட தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

