சாதாரண தரப் பரீட்சையில் மேல் மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் முதலிடம்: பூகொடை, குமாரிமுல்ல முஸ்லிம் ம.வி. சாதனையாளர்கள் கௌரவிப்பு!

Rihmy Hakeem
By -
0

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பூகொடை, குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள்  94 சதவீதத்திற்கும் அதிக சித்தி பெற்றமைக்கான பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (02) பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் DMSM அவுன் அவர்களின் தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.


இம்முறை குமாரிமுல்ல முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இருந்து 34 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி ​

கணிதம்:  94.1% சித்தி 

​விஞ்ஞானம்:  97% சித்தி

​வரலாறு :  94.1% சித்தி

​ஏனைய சகல பாடங்களிலும்: 100%  சித்தி பெற்று மேல் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலிடம் பெற்றுள்ளது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கம்பஹா கல்வி பணிப்பாளர் திரு. அஜிதா பிரியங்கனி, கம்பஹா களனி பிரதி கல்வி பணிப்பாளர் MTM தவ்ஸீர் மற்றும் கல்வி வலயத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.


மாணவர்களை பாராட்டி பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இவ்விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக, மாணவர்களின் வசதிக்காகப் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது நுழைவாயில் பிரதம அதிதி அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வை பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் மாற்றும் பழைய மாணவிகள் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


தகவல் - பூகொட இர்பான் ஹனீபா









கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)