பூஜித, ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

Rihmy Hakeem
By -
0
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (23) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)