கம்பஹா மாவட்டத்திலிருந்து புதிதாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களுக்கான வரவேற்பும் பட்டதாரிகள் மாநாடும்

Rihmy Hakeem
By -
0
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் Undergraduate Society of Gampaha District Moors (USGDM) இன் ஏற்பாட்டில் 2019/2020 கல்வியாண்டுக்காக கம்பஹா மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான வரவேற்பும் பட்டதாரிகளுக்கான மாநாடும் (2019) நிட்டம்புவ, ஹொரகொல்லவில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகர்த்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கபூர் அவர்கள் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நபீஸ், கலாநிதி ரவூப் ஸைன், மௌலவி அம்ஹர் ஹகம்தீன் ஆகியோர் ஏனைய அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)