(எம்.பஹ்த் ஜுனைட்)
2018 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை மிகச்சிறப்பாக வடிவமைத்து செயற்படுத்தியமைக்காக காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கிவரும் பொதுநூலகம் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் சிறந்த நூலகமாக தெரிவு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை(19) கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய விழாவில் வைத்தே இவ் விருது வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் தேசிய வாசிப்பு மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 2004 ஆண்டு தொடக்கம் காத்தான்குடி பொது நூலகம் இவ் விருதை தொடர்ச்சியாக பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

