இலங்கைக்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0


இலங்கைக்கான ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிக்கப்பட்டதாக சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் இலங்கை ஹஜ் குழுவுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை பிரதமரினால் நியமிக்கப்பட மர்ஜான் பளீல் தலைமையிலான ஐவர் அடங்கிய ஹஜ் குழு சவுதி சென்றுள்ள நிலையில் அங்கு சவுதி இலங்கையிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் மற்றும் சவுதி அரேபிய ஹஜ் பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் இடையே கைச்சத்திடப்பட்டது.

கடந்த வருடம் இலங்கைக்கு 2850 ஹஜ் கோட்டா வழங்கப்பட்ட நிலையில் அதனை 3500 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)